Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டதாகவும், மொத்த விற்பனையாளர்களுக்கான (WSD) கமிஷன் குறைக்கப்பட்டதாகவும் சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
ஆவின் நிறுவனத்தின் அனைத்து வகையான நெய்களும் தற்போது நடைமுறையில் உள்ள அதே சில்லறை விலையிலேயே பொதுமக்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகை நெயின் விலையும் உயர்த்தப்படவில்லை என்றும் ஆவின் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், மொத்த விற்பனையாளர்களுக்கான (WSD) கமிஷன் திருத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த கமிஷன் முறையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் ஆவின் நெய் விலை உயர்வு மற்றும் கமிஷன் குறைப்பு தொடர்பாக வெளியான தகவல்களுக்கு ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வ மறுப்பு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ