Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 20 ஜூலை (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருமலையில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 956 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 5 லட்சமாக பதிவாகியுள்ளது.
மேலும், நேற்று 33 ஆயிரத்து 46 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4 லட்சத்து 44 ஆயிரம் லட்டு பிரசாதங்கள் விற்பனையானது.
அன்னபிரசாதத்தை 2 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் பெற்றுக்கொண்டனர். மருத்துவ சேவைகளை 3,708 பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA