Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லூர் , 20 ஜூலை (ஹி.ச.)
நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற ‘ஷைனிங் ஸ்டார் அவார்ட்ஸ் - 2026’ நிகழ்ச்சியில் அமைச்சர் நாராயணா கலந்து கொண்டு, சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு சுக்லாவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய அமைச்சர் நாராயணா,
தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தேன்.
பின்னர் கிரேஸ் மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி பெற்றேன்.
அந்த தோல்வி எனக்குள் விடாமுயற்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கடினமாக படித்து, பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று, புள்ளியியல் பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்றேன்.
படிப்பை முடித்த பிறகு வி.ஆர்.சி.யில் ரூ.40 சம்பளத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினேன். அரசு விரிவுரையாளர் பணி கிடைத்தபோதும் அதை விட்டு விலகி, டியூஷன் நடத்தி உழைத்து இந்த நிலைக்கு வந்தேன். வாழ்க்கையில் முன்னேற கல்வியும், விடாமுயற்சியும் மிகவும் முக்கியம்.
மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு, உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், ஆந்திராவில் இளைஞர் தலைவர் நாரா லோகேஷ் தலைமையில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருவதாக அமைச்சர் நாராயணா கூறினார்.
இந்த மாற்றங்களை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கல்வியின் மூலம் வறுமையை வெல்ல முடியும் என்றும், கடின உழைப்புடன் முயற்சி செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றும் ஆந்திர மாநில நகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பொங்கூர் நாராயணா தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA