Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் சாலைகளின் உயரம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
டெண்டர் முறைகேடு மற்றும் கமிஷன் நோக்கத்திற்காக திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் சாலைகளின் உயரம் தேவையின்றி அதிகரிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் கடன் வாங்கி கட்டிய வீடுகள் தற்போது சாலை மட்டத்தை விட பள்ளமாக மாறி, மழைக்காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், இதற்கு தமிழக அரசு என்ன தீர்வு வழங்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதோடு, சாலைகளை மீண்டும் பழைய உயரத்திற்கு குறைப்பீர்களா அல்லது பாதிக்கப்பட்ட வீடுகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி அமைத்துத் தருவீர்களா என்றும் அறப்போர் இயக்கம் வினவியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் புதிதாக அமைக்கப்படும் சாலைகள் பழைய சாலை உயரத்தை விட அதிகமாக இல்லாமல் அமைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வை அறிவிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ