Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 ஜூலை (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் அடிப்படையில் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மார்கண்டேயனை கைது செய்ய அதிகாலையில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது, தகவலறிந்து அங்கு திரண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, அரசின் அராஜகப் போக்கை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர், போலீசார் மார்கண்டேயனை காவலில் எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கைது சம்பவம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P