சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் இன்று ராஜினாமா? – அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை, 20 ஜூலை (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களாகக் கூறப்படும் சில அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்து தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்க உ
Cv


சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களாகக் கூறப்படும் சில அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்து தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டிவனத்தில் இருந்து அவர்கள் இன்று காலை சென்னை நோக்கி புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னை வந்ததும் முதலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று, அங்கு மொட்டை அடிக்கும் நிகழ்வில் ஈடுபட உள்ளதாகவும், அதன் பின்னர் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலையடுத்து, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ