Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஜூலை (ஹி.ச)
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,
பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தங்களை நோக்கி வைக்கப்பட்ட விமர்சனங்களை பெருந்தன்மையுடன் கடந்து சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடுமையான விமர்சனங்களை அமைதியாக எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையிலும் பொதுக்கூட்டங்களிலும் முதலமைச்சர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பேச்சுகளை சுட்டிக்காட்டி, அதே மொழியில்தான் மார்க்கண்டேயன் பதிலளித்ததாகவும், அதற்காக அவரைக் கைது செய்தது ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளுக்கும், எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளுக்கும் இரட்டை அளவுகோல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் அப்பாவு எழுப்பியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை ஏற்கும் ஜனநாயக மனப்பக்குவம் அரசுக்கு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, தலைவர்களின் படங்களை வெறுமனே அலங்கரித்தால் மட்டும் போதாது,அவர்களது பண்புகளும் வர வேண்டும் என்று தனது பதிவில் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ