திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததை கண்டித்து திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது கேவலத்தின் உச்சகட்டம் - பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை, 20 ஜூலை (ஹி.ச.) விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளிய
Narayanan


Nn


சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதலமைச்சரை நோக்கி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், மார்க்கண்டேயனை கைது செய்திருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கைதை எதிர்த்து திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள அவர், மக்கள் பிரதிநிதிகள் நாகரிகமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளச் செய்வது கட்சித் தலைமையின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து திமுக நிர்வாகிகள் தரக்குறைவாக பேசியதாக பாஜக அளித்த புகார்களில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

அந்தப் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும், அவற்றில் அலட்சியம் காட்டிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ