Enter your Email Address to subscribe to our newsletters

இந்தியா, 20 ஜூலை (ஹி.ச.)
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி கோப்பையை வென்றுள்ளது.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 1-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனாக வாகை சூடியுள்ளது
20.07.26(இன்று)
ஒன்றரை மாதகாலக் கொண்டாட்டம்
ஸ்பெயினின் அபார வெற்றியோடு நிறைவுக்கு வந்துவிட்டது.
ஏற்கனவே வெல்லும் என உலகக்கிண்ண ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்ட ஒரு அணி ஸ்பெயின்.
பிரான்ஸை வெற்றிகொண்டு ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும் ,
இங்கிலாந்துக்கு கடைசி நிமிடங்களில் அபார அடிகொடுத்து ஆஜென்ரீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும் , இன்றைய இறுதிப்போட்டி எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே ,
மிகப் பலமாக இரண்டு அணிகளும் ஆடின,
குறிப்பாக இரண்டு அணிகளினதும் கோல்காப்பாளர்கள் மிகப்பலம், அதுவும் ஆஜென்ரீன கோல்காப்பாளர் பாய்ந்து பாய்ந்து தடுத்த அத்தனை கோல்களாலும் தான் போட்டி இந்தளவு நேரம் நீடித்தது என்று சொல்லலாம்.
போட்டியில் கூடியளவு ஆதிக்கம் ஸ்பெயின் பக்கம் தான்.
ஆஜென்ரீன வீரர்களின் கால்களில் இந்தத்தடவை பந்து நின்றது, ஸ்பெயினுடன் ஒப்பிடுகையில் குறைவு.
பந்து பரிமாற்ற துல்லியம், இலக்கு நோக்கி அடித்தது எல்லாவற்றிலும் ஸ்பெயினின் ஆதிக்கம் தான்.
ஆஜென்ரீன அணிக்கு ஒரு சிவப்பு அட்டையால்(2-Yellow) முன்னணி வீரர் Fernández வெளியேறிவிட 10 வீரர்களுடன் தான் மேலதிக நேரத்தில் விளையாட வேண்டியதாகிவிட்டது.
அத்தனையும் ஸ்பெயினுக்கு சாதகமாகி வர, ஸ்பெயினின் அபார ஆட்டமும் கைகொடுக்க ,
ஸ்பெயின் வெற்றி உறுதியானது.
அவ்வகையில் ஸ்பெயின்
2026 உலகக்கிண்ண சம்பியன்கள் என்ற சாதனையை நிலைநாட்டியது.
இந்த பிரம்மாண்டமான உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் வெற்றியின் சிறப்பம்சங்கள்:
இறுதிப் போட்டி மைதானம்:
நியூஜெர்சியின் மெட்லைஃப் (MetLife) மைதானம்.
வெற்றி விபரம்:
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
வரலாற்று சாதனை:
2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஸ்பெயின் வெல்லும் முதல் உலகக்கோப்பை இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் கைகளால் உலகக்கிண்ணத்தை பெற்றது ஸ்பெயின்.
Hindusthan Samachar / Durai.J