Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான (TNEA) கலந்தாய்வு கடந்த சில வாரங்களாக பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கு நடைபெற்று வந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.
இந்த முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள 39,000 மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 2,500 மாணவர்களும் என மொத்தம் 41,500 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாணவர்களுக்கான விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்யும் (Choice Filling) நடைமுறை இன்று தொடங்கி, அடுத்த சில நாட்களுக்கு நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். இதனைத் தொடர்ந்து தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்பட்டு, இறுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
முதல் சுற்று முடிந்த பிறகு இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று கலந்தாய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b