Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 ஜூலை (ஹி.ச.)
புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்காது. நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்பவர்கள் விட்டு வைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தில் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட நன்கொடையில் கோடிக்கணக்கில் அங்கு இருக்கும் பணியாளர்கள் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கூறு போட்டு எடுத்துக் கொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் பிடித்துள்ளது.
இப்போது வெளியில் வந்திருப்பது ஒரு பகுதி தான் இந்த பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுப்பதற்காக ஒரு குழுவை பாராளுமன்றத்தில் அறிவித்தார். அந்த குழுவைச் சேர்ந்தவர் தான் ஊழல் செய்திருக்கிறார்.
இதுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல நன்கொடை ஊழல் தொடர்பாக பிரதமர் இதுவரை வைத்திருக்கவில்லை. இதிலிருந்து மோடி அயோத்தி ராமர் கோவில் நடைபெற்ற நன்கொடை ஊழலை மூடி மறைக்க பார்க்கிறார்.
அது மட்டும் இல்லாமல், நீட் தேர்வு சம்பந்தமாக இந்தியாவில் அனைத்து அமைப்புகளும் இந்தியா கூட்டணி கட்சிகளும் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி எல்லோரும் ஒருங்கிணைந்து நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் வினா தாள் கசிந்த தொடர்பாக யார் யார் தொடர்பு உடையவர்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் அல்ல இந்த ஊரில் சம்பந்தப்பட்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னது மட்டும் அல்லாமல் தன்மேந்திர பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்தியவர்கள், நீட் தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறோம் ராகுல் காந்தி அவர்கள் இந்தியா முழுவதும் சென்று இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
ஆனால் இது தொடர்பாக, மோடி எந்த பதிலும் சொல்வதில்லை. எந்தெந்த பிரச்சனைகளில் இருந்து இக்கட்டான சூழல் உருவாகிறதோ அதைப் பற்றி பேச மாட்டார்.
கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் செய்யும் வாங்சூங் அவர்கள் 21 நாட்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடிய உண்ணாவிரதம் இருந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் மொத்தமாக கோரிக்கை வைத்த பிறகும் அதனை செவி சாய்க்காமல் மிகவும் இந்த பிரச்சினைகளை மூடி மறைக்க பார்க்கிறது.
பாராளுமன்றத்தில் இவைகள் எல்லாம் எதிரொலிக்கும் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN