வாலாஜாபேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க கவசங்கள் கொள்ளை
ராணிப்பேட்டை, 20 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிமேடு பகுதியில் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு மர்ம நபர்கள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. கோயிலின் கருவறையி
வாலாஜாபேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில்  ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க கவசங்கள் கொள்ளை


ராணிப்பேட்டை, 20 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிமேடு பகுதியில் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு மர்ம நபர்கள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

கோயிலின் கருவறையில் இருந்த சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் மற்றும் சுமார் ஐந்து சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட கவசங்கள் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய் இருக்கும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வழக்கம் போல் கோயிலை திறக்க வந்த அர்ச்சகர் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு கவசங்கள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோயில் வளாகத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b