இங்கிலாந்தில் அதிக சதங்கள் - உலக சாதனை படைத்த ரோகித் சர்மா
லண்டன் , 20 ஜூலை (ஹி.ச.) இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய
A


லண்டன் , 20 ஜூலை (ஹி.ச.)

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், தொடரை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 387 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசி அணியின் வெற்றி நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்தார்.

இந்தச் சதம் இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா அடித்த 8-வது சதமாகும். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலகச் சாதனையை அவர் படைத்தார்.

எனினும், இறுதிக்கட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சரிவை சந்தித்ததால், 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA