Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 20 ஜூலை (ஹி.ச.)
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில் அமுல் நிறுவனத்தின் வங்காள பால் பண்ணைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.700 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா காணொலி வாயிலாக நாட்டினார்.
இந்தத் தொழிற்சாலையில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு, 10 லட்சம் கிலோ தயிர் மற்றும் பிற பால் பொருட்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.25 லட்சம் பால் உற்பத்தியாளர்கள், குறிப்பாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு இல்லாத வகையில் மேற்கு வங்காளத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சோனார் பங்களா (பொன்னான வங்காளம்) என்ற கனவை மீண்டும் நனவாக்கும் முயற்சி தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA