ரூ.100 கோடி போலி ஆவணங்களை வைத்து மோசடி புகாரில் எம் ஆர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
கரூர், 20 ஜூலை (ஹி.ச.) கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி க
MR Vijayabaskar


கரூர், 20 ஜூலை (ஹி.ச.)

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று கரூர் நீதிமன்றத்தில் நில மோசடி வழக்கு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆஜராகி உள்ளார்.

இந்த வழக்கில் அப்போதைய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்திவிராஜ் ஆஜராகி உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN