நெய் விலை உயர்வு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை
சென்னை, 20 ஜூலை (ஹி.ச.) சமீபத்தில் ஆவின் நெய் விலையை திடீரென உயர்த்தி ஆவின் நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவு பால் முகவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வை ஆவின் நிர்வாகம் உடனடியாக திரும்ப
நெய் விலை உயர்வு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும்  - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை


சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)

சமீபத்தில் ஆவின் நெய் விலையை திடீரென உயர்த்தி ஆவின் நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவு பால் முகவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வை ஆவின் நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கான விலை லிட்டருக்கு 37 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சில்லறை விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டு, தங்களது அன்றாட வருமானம் பாதிக்கப்படுவதாக முகவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போலவே ஆவின் அதிகாரிகளின் போக்கு தொடர்ந்து அமைந்துள்ளதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பால் முகவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஏகபோக முடிவுகளை எடுத்து வரும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக இந்த விலை உயர்வு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

ஆனால் நெய் விலை உயர்வு மற்றும் கமிஷன் குறைப்பு தொடர்பாக வெளியான தகவல்களுக்கு ஆவின் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ மறுப்பு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b