பழனி கோயில் நில மோசடி விவகாரம் - சிபிசிஐடி 5 ஆவது நாளாக விசாரணை
திண்டுக்கல், 20 ஜூலை (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தங்களது வி
CBCID


திண்டுக்கல், 20 ஜூலை (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகக் பத்திர ஆவணங்கள், சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மற்றும் நிலப் பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று 5-வது நாளாகச் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

இன்று காலை ஒரே காரில் வருகை தந்த 3 பேர் கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் குழுவினர், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்றனர்.

அதே நேரத்தில், பத்திரப்பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் இன்னும் சில மணி நேரங்களில் இங்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN