Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
சென்னை அருகே வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் அஜய், வயது 20.
இவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அஜயை, மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b