Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மேற்கொள்ளவில்லை என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக வேளாண் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டபின் இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. அவரது திருச்சுழி தொகுதிக்குள்தான் குண்டாறு அமைந்துள்ளது.
ஆனால், காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி, அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்றார்.
மேலும், காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், சீமைக் கருவேல மரங்களை அகற்றி சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கூடுதல் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்க வழிவகுக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam