Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 20 ஜூலை (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தில் தெருநாய் தாக்கியதில் 4 வயது குழந்தை படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிம்மியம்பட்டு கிராமம், பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்த நந்தகுமாரின் 4 வயது மகன் ரித்திக், இன்று வீட்டின் முன்பு சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் திடீரென குழந்தையை தாக்கியது. குழந்தையின் கண், காது, கன்னம், கை, கால் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் நாய் கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் நாயை விரட்டியடித்து, படுகாயமடைந்த ரித்திக்கை மீட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நாய் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam