தவெக எம்.எல்.ஏ. பேரம் வழக்கு - இதுவரை ரூ.4 கோடி பறிமுதல், 14 பேர் கைது
தமிழ்நாடு, 20 ஜூலை (ஹி.ச.) தவெக எம்.எல்.ஏ.க்களை பேரம் பேச முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ரூ.4 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்
தவெக


தமிழ்நாடு, 20 ஜூலை (ஹி.ச.)

தவெக எம்.எல்.ஏ.க்களை பேரம் பேச முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ரூ.4 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட 13 மற்றும் 14-வது குற்றவாளிகளான கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வந்த தீபம் பைனான்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, கணக்கில் வராத ரூ.2.82 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பணம் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேச பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் சந்தேகிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.82 கோடி பணத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் மொத்தம் சுமார் ரூ.4 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam