வானூர் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விவகாரம் - தவெக அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்
விழுப்புரம், 20 ஜூலை (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் வானூரில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை மக்கள் பிரதிநிதியோ அல்லது அரசுப் பொறுப்பில் உள்ளவரோ அல்லாத ஒருவர் திறந்து வைத்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனி
வானதி சீனிவாசன்


விழுப்புரம், 20 ஜூலை (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் வானூரில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை மக்கள் பிரதிநிதியோ அல்லது அரசுப் பொறுப்பில் உள்ளவரோ அல்லாத ஒருவர் திறந்து வைத்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தவெக அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் (X) தள பதிவில்,

தவெக உறுப்பினர் என்ற அடையாளத்தை மட்டும் கொண்டு தொடர்ந்து விதிமுறைகள் மீறப்படுகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறுவது, அரசு கட்டிடங்களும் அலுவலகங்களும் ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விதிமீறல்களுக்கு எதிராக தவெக தலைமையால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், ஆளுங்கட்சியினரே அரசின் செயல்பாடுகளில் தலையிட்டால், மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் எதற்காக? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விதிமீறல்கள் இனி நடைபெறாத வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைமை தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam