Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 20 ஜூலை (ஹி.ச)
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான தங்கதுரை அங்குள்ள பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது அண்ணன் ஏழுமலைக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏழுமலையை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் வந்த வீரமணி, அங்கிருந்த தங்கதுரையை படுகொலை செய்துள்ளார்.
ஏழுமலையை என நினைத்து அல்லது ஆத்திரத்தில் அண்ணனுக்கு பதிலாக தம்பியான தங்கதுரையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடலூர் போலீசார், கொலை செய்யப்பட்ட தங்கதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான வீரமணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளியை விரைந்து கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b