Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 20 ஜூலை (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அந்தியூர், தவிட்டுப்பாளையம், குந்துப்பாயூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஜாபர் அலி, விக்னேஷ், ஞானராஜ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 30 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த போதை மாத்திரைகளை அவர்கள் எங்கிருந்து வாங்கி வந்தார்கள், யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b