Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 21 ஜூலை (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 40) சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றார்.
இவர் நேற்று மாலை மதுரவாயல் நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோதோ அல்லது சாலையோரம் நின்று கொண்டிருந்த போதோ, புழல் நோக்கி அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
லாரியின் வேகம் அதிகமாக இருந்ததால், மோதிய வேகத்தில் விஜயகுமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது.
அவரை பிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b