Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 21 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் 25,250 ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்களை பாதுகாக்கவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், இன்று (21.07.2026) முதல் ஆகஸ்ட் 5 வரை 15 நாட்களுக்கு அமராவதி பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கனஅடி வீதம், மொத்தம் 570.24 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அதேபோல், பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க்கால்கள் மூலம் 7,520 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், இன்று முதல் டிசம்பர் 3 வரை 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
இதில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பும், 55 நாட்கள் தண்ணீர் நிறுத்தமும் (முறைப்பாசனம்) அமல்படுத்தப்படும். வினாடிக்கு 300 கனஅடி வீதம், மொத்தம் 2,073.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தண்ணீர் திறப்பு மூலம் மொத்தம் 32,770 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளன. தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam