ஆந்திராவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உணவுப் பதப்படுத்தும் கிளஸ்டர் டாவோஸ் ஒப்பந்தம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
அமராவதி , 21 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் தொழில் வளர்ச்சியையும் வெளிநாட்டு முதலீடுகளையும் ஊக்குவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உணவுப் பதப்படுத்தும் கிளஸ்டரை அமைக்க முன்வந்துள்ளது. இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற
A


அமராவதி , 21 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் தொழில் வளர்ச்சியையும் வெளிநாட்டு முதலீடுகளையும் ஊக்குவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உணவுப் பதப்படுத்தும் கிளஸ்டரை அமைக்க முன்வந்துள்ளது.

இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, UAE-யின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை மாநில தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தச் சந்திப்பில்,

ஆந்திரப் பிரதேசத்தில் முழுமையான உணவுப் பதப்படுத்தும் மதிப்புச் சங்கிலியை (Value Chain) உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன்படி, மாநில அரசும், UAE அரசும் இணைந்து உணவுப் பதப்படுத்தும் துறையில் கூட்டாண்மையுடன் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் அதிக அளவில் விளையும் மாம்பழம், வாழைப்பழம், கோகோ உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் நவீன முறையில் பதப்படுத்தப்பட்டு, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப பொதியிடப்பட்டு உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், வேளாண் விளைபொருட்களுக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கவும், உணவுப் பதப்படுத்தும் துறையில் புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அமைச்சர் டி.ஜி. பரத், உணவுப் பதப்படுத்தல் மற்றும் தொழில்துறை உயர் அதிகாரிகள், ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரிய (APEDB) அதிகாரிகள் மற்றும் UAE பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA