மங்களகிரியில் ஏழைகளுக்கு நிரந்தர வீட்டு பட்டா - அமைச்சர் நாரா லோகேஷ் வழங்கினார்
மங்களகிரி , 21 ஜூலை (ஹி.ச.) மங்களகிரி தொகுதியில் ஏழை மக்களுக்கு நிரந்தர வீட்டு உரிமை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு
A


மங்களகிரி , 21 ஜூலை (ஹி.ச.)

மங்களகிரி தொகுதியில் ஏழை மக்களுக்கு நிரந்தர வீட்டு உரிமை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு வீட்டு பட்டாக்களை வழங்கினார்.

மங்களகிரியில் உள்ள சி.கே. கன்வென்ஷன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ‘மன் இல்லு–மன் லோகேஷ்’ என்ற பெயரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வீட்டு பட்டாக்கள் பெற்ற பயனாளிகளுக்கு புதிய ஆடைகளும் வழங்கப்பட்டன. மேலும், அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

மங்களகிரி தொகுதியில் தாடேபள்ளி, உண்டவள்ளி, பிரகாஷ் நகர், நுலகபேட்டை, போலக்கம்பாடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வந்த ஏழை குடும்பங்கள் வீட்டு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

சில குடும்பங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகவும், சில குடும்பங்கள் 20 முதல் 40 ஆண்டுகள் வரையிலும் வீட்டு உரிமைக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில், நிரந்தர வீட்டு பட்டா கிடைத்ததால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

பல ஆண்டுகளாக சொந்த வீட்டுக்கான உரிமை ஆவணம் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். தற்போது நிரந்தர பட்டா கிடைத்துள்ளதால் எங்களுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை அமைச்சர் நாரா லோகேஷ் நிறைவேற்றியுள்ளதாக பயனாளிகள் தெரிவித்தனர்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மங்களகிரி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாரா லோகேஷ், தகுதியான ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA