ராமேஸ்வரம் லட்சுமணன் தீர்த்தத்தில் சாமி தரிசனம் செய்த அசாம் மாநில ஆளுநர்
ராமநாதபுரம், 21 ஜூலை (ஹி.ச.) ராமேஸ்வரத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் மாநில ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியார் வருகை தந்தார். இந்த நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட லட்சுமணத் தீர்த்தத்தில் அசாம் ஆளுநர் தனத
Governor Lakshman


ராமநாதபுரம், 21 ஜூலை (ஹி.ச.)

ராமேஸ்வரத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் மாநில ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியார் வருகை தந்தார்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட லட்சுமணத் தீர்த்தத்தில் அசாம் ஆளுநர் தனது குடும்பத்துடன் தீர்த்த குளத்தில் ஆச்சாரியார்கள் தீர்த்தம் தெளித்து பின்னர் சாமியை வழிபட்டார்.

இதனை அடுத்து தங்கச்சிமடம் பகுதியில் உள்ள வில்லூண்டி தீர்த்த பகுதியில் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் ராமேஸ்வரத்திற்கு அசாம் மாநில ஆளுநர் வருகை தந்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து நாளை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பின்னர் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்ய உள்ளார், தொடர்ந்து தனுஷ்கோடி செல்கிறார்.

Hindusthan Samachar / ANANDHAN