ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. தேர்தல் வழக்கு - ஜூலை 28-க்குள் திருத்த மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 21 ஜூலை (ஹி.ச.) ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வழக்கில் வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், த
Ilaya


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் வழக்கில் வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான தேர்தல் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஜூலை 28-ஆம் தேதிக்குள் திருத்த மனுவை தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் மனு நிராகரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான தேர்தல் வழக்குகளின் விசாரணையையும் ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ