Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 ஜூலை (ஹி.ச.)
மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜீத் தீப்கே, போராட்டத்தில் பங்கேற்ற ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
குறிப்பாக ஆண் காவல்துறையினரால் தாக்கப்பட்ட பெண் போராட்டக்காரர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை காவல்துறையின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பதில் தாம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்கு பொறுப்பானவர் என்று குற்றம்சாட்டிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாதுகாக்கும் நோக்கில், மேலும் பல மாணவர்களின் ரத்தத்தைச் சிந்த அரசாங்கம் தயாராக இருந்ததாக அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
போராட்டத்தில் காயமடைந்த மாணவர்கள் தன்னை நேரடியாக தொடர்புகொள்ளுமாறும், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
இறுதியாக, மாணவர்களுக்காக தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P