குறைந்த அளவே கொட்டும் தண்ணீர் - குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 21 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது குவிந்து வருகின்றனர்
Courtallam Falls


தென்காசி, 21 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழையின் தாக்கம் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து என்பது வெகுவாக குறைந்து காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது தண்ணீர் வரத்து என்பது குறைந்து காணப்பட்டு வரும் நிலையில், குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போட வேண்டும் என்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியல் போட்டு வரும் நிலையில், வேலை நாட்கள் என்ற போதிலும் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN