நெல்லை மாநகராட்சி மேயருக்கு கொலை மிரட்டல் - புகாரின் பேரில் இருவர் கைது
நெல்லை, 21 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு அலைபேசி வாயிலாகவும், நேரிலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேயர் ராமகிருஷ்ணன் தரப்பில் நெல்லை மாநகர காவல் நிலை
Death threat against Nellai Corporation Mayor


நெல்லை, 21 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு அலைபேசி வாயிலாகவும், நேரிலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேயர் ராமகிருஷ்ணன் தரப்பில் நெல்லை மாநகர காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தது முகமது அப்சல் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் செயல்பட்ட இவர்கள் இருவரையும் நெல்லை மாநகரக் காவல்துறை கண்காணித்து உடனடியாகக் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் எதற்காக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர், இதன் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்கள் மற்றும் பொதுவெளிகளில் அவதூறு பரப்புவோர் மற்றும் கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b