Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 8193 திருக்கோயில்களில் காலியாக உள்ள பரம்பரை முறை சாரா அறங்காவலர் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய திருக்கோயில்களில் நிர்வாகத்தை மேம்படுத்தவும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் கோயில்கள் வாரியான விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவத்தை www.hrce.tn.gov.in என்ற அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கோயில்களின் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே முதற்கட்டமாக 1012 திருக்கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 8193 கோயில்களுக்கு இந்த அறிவிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b