டி20 கிரிக்கெட் தொடர் - ஜிம்பாப்வே சென்றடைந்த இந்திய அணி
ஹராரே , 21 ஜூலை (ஹி.ச.) ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதிய
A


ஹராரே , 21 ஜூலை (ஹி.ச.)

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, ஜிம்பாப்வே தொடரில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இளம் வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள இந்த அணியின் செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA