மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிறந்தநாள் - தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!
சென்னை, 21 ஜூலை (ஹி.ச) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
CM Joseph Vijay


சென்னை, 21 ஜூலை (ஹி.ச)

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயும் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு, அவருக்கு நீண்ட ஆயுளும், நல்ல உடல்நலனும், மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ