பள்ளி விடுதியில் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
காஞ்சிபுரம், 21 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர் சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூத்த மகள் பால ரக்ஷனா (16), காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பாரத
Death


காஞ்சிபுரம், 21 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர் சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது மூத்த மகள் பால ரக்ஷனா (16), காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பாரதிதாசன் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN