Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலு (வயது 53 ) என்பவர், அசோக் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு வீட்டு வேலைக்காக வந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சாட்சியங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றவாளி பாலுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b