Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 21 ஜூலை (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இன் கோ சார்வ் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்திற்கு வந்திருந்த சிறு குரு தொழில்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
நீலகிரி மாவட்டத்தில் இன்கோ சர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த தேயிலை தொழிற்சாலைகளில் தரம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரியுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இன்கோசர் தொழிற்சாலைகள் தேயிலை விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமுகம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அமைக்கப்பட்டுள்ளது.
இது சிறந்த முறையில் மக்களிடம் பயன்பெற அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
உற்பத்தி அதிகரித்தாலும் விலை ஏற்றம் இல்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு விலையேற்றத்திற்கு ஏற்ப ஆய்வு குழுக்கள் அமைத்து அதிகாரியுடன் ஆலோசித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN