Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஜூலை (ஹி.ச.)
த.வெ.க. அரசின் செயல்பாடுகளை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தள பதிவில்,
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்க முயலும் த.வெ.க. அரசின் போக்கை
The Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம் கடுமையாகச் சாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது என விமர்சித்துள்ளார்.
அத்துடன், ஆட்சியின் அலங்கோலங்களை கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால், மக்களே அந்த ஆணவத்துக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P