பழனி கோவில் நில மோசடி வழக்கு - 6-வது நாளாக சிபிசிஐடி விசாரணை தீவிரம்
சென்னை, 21 ஜூலை (ஹி.ச.) பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான முறைகேடு மற்றும் ஆக்கிரமிப்பு புகார்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்று 6-வது நாளாகவும் திண்டு
பழனி


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான முறைகேடு மற்றும் ஆக்கிரமிப்பு புகார்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்று 6-வது நாளாகவும் திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக, பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, அவர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களின் உரிமை, குத்தகை ஒப்பந்தங்கள், வருவாய் பதிவுகள் மற்றும் நில பரிவர்த்தனைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கிடைக்கும் ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பழனி கோவில் நில மோசடி தொடர்பான விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த வழக்கில் மேலும் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P