Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 21 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்து விட்டு வெளியே வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும் போது,
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நேரில் பார்த்தேன் பாளையங்கோட்டை சிறைச்சாலை திமுகவுக்கு புதிதாக இல்லை.
கருணாநிதி இருந்தவர் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் அவர் இருந்த சிறைச்சாலை தான். திமுகவில் இருப்பவர்கள் யார் இந்த சிறைச்சாலைக்கு வந்தாலும் பெருமையாக நினைக்கிறார் சட்டமன்ற உறுப்பினர் அது பெருமையாக நினைக்கிறார்.
எந்த அச்சுறுத்தலுக்கு பயத்திற்கும் கைதுக்கெல்லாம் திமுக பயப்படாது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மிகவும் மோசமான முறையில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வழக்கும் குற்றம் சொல்லும் அளவிற்கு குற்றங்கள் பெருகி கொண்டிருக்கிறது. அவரை விசாரிக்க கூடிய நிலையில் கூட இந்த அரசு தயாராகவில்லை. தவறாக பேசினார் என்று மார்க்கண்டேயனை கைது செய்யக்கூடிய நிலையிலும், அனிதா ராதாகிருஷ்ணன் மீது போட்ட அச்சுறுத்தல் வழக்குகள் போடப்பட்டுள்ளது. கருத்துக்கள் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்துக்கு மக்களை பற்றி கவலை இல்லை. கடந்த திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு தமிழக முதலமைச்சரை தமிழக வெற்றி கழகத்தினர் பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக வெற்றி கழகத்திற்கு விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் தமிழக வெற்றி கழகத்தினருக்கு இல்லை.
யாருக்கோ பயந்த, பாரதிய ஜனதா கட்சிக்கு பயந்து ஆட்சி செய்து கொண்டு வருகிறார் தமிழக வெற்றிக் கழக முதலமைச்சர். டெல்லியில் மாணவர்களின் போராட்டம் எப்படி கையாளப்படுகிறது? அதே போன்ற நிலைமை தமிழகத்தில் உள்ளது.
திமுக தமிழக நலன் கொள்கையில் இருந்து என்றும் விட்டுக் கொடுத்ததில்லை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதிமுக திமுக எந்த காலத்தில் நெருங்கி வந்தது கிடையாது. சில நேரங்களில் தமிழகத்தின் போராட்டத்தை நடத்தக் கூடியவருக்கு கடந்த காலங்களில் தமிழக உரிமைகளுக்காக கோரிக்கைகளுக்காக இணைந்து சென்று பிரதமரை சந்தித்திருக்கிறோம்.
தமிழகம் என்ற போது எல்லா கட்சிகளும் ஒத்த கருத்தோடு இருக்கப்பட வேண்டும். நீட்டுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி செயல் பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN