பொள்ளாச்சி நீர்வளத்துறையில் வெளியிடப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து
சென்னை, 21 ஜூலை (ஹி.ச.) கோயமுத்தூர் மண்டல நீர்வளத்துறையின் பரம்பிக்குளம்–ஆழியார் வடிநிலப் பகுதி, பொள்ளாச்சி பிரிவில் வெளியிடப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொள்ளாச்சி பிரிவில் மேற்கொள்ளப்படவிருந்த பல்வேறு பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெ
Jj


Water shortage in dams as rains draw in state, 126 dams less than 25% full


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)

கோயமுத்தூர் மண்டல நீர்வளத்துறையின் பரம்பிக்குளம்–ஆழியார் வடிநிலப் பகுதி, பொள்ளாச்சி பிரிவில் வெளியிடப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பிரிவில் மேற்கொள்ளப்படவிருந்த பல்வேறு பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெண்டர்கள், திறந்த போட்டி முறையான (Open Tender) டெண்டராக இல்லாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கும் வகையில்

(Limited Tender) வெளியிடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

மேலும், டெண்டரில் பங்கேற்க தேவையான ஒப்பந்ததாரர் சான்றிதழைப் பெற விண்ணப்பதாரர்கள் நேரில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நடைமுறை வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது என ஒப்பந்ததாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த புகார்கள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்து, கோயமுத்தூர் மண்டல நீர்வளத்துறையின் பரம்பிக்குளம்–ஆழியார் வடிநிலப் பகுதி, பொள்ளாச்சி பிரிவில் வெளியிடப்பட்ட 22 டெண்டர்களையும் நீர்வளத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து துறை சார்பில் விரிவான விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ