Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாம்பலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 53) நீண்ட காலமாக ரியல் எஸ்டேட் தரகு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று தனியாக அழைத்து மிரட்டியுள்ளது.
உன்னை கொன்று விடுவோம் என மிரட்டி அவரிடம் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமார், இது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றத்தில் ஈடுபட்டது 3 இளைஞர்கள் என்பது உறுதியானது.
இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பணம் பறிப்பில் ஈடுபட்ட சுதாகர் (19), சதீஷ் (19) மற்றும் விக்னேஸ்வர் (27) ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மாம்பலம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்றும், இந்த பணம் பறிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b