நீட் எதிர்ப்புப் பாடகர் தெருக்குரல் அறிவு கைது - தமிழக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனம்
சென்னை, 21 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கைது செய்யப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
உதயநிதி


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கைது செய்யப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக தெருக்குரல் அறிவை தமிழக அரசு கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

அவரது குரல் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழலில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது கவலைக்குரிய செய்தியை இளைஞர்களுக்கு அனுப்புவதாகவும், டெல்லியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக களமிறங்க நினைக்கும் தமிழக இளைஞர்களுக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீட் தேர்வு முறைகேடுகள் நிறைந்தது மட்டுமல்ல, அது ஒரு மோசடியாக மாறியுள்ளது. நீட்டுக்கு எதிராக எழும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது; அவை கேட்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இறுதியில், #BanNEET என்ற ஹேஷ்டேக்கையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P