Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் கடும் போர் பதற்றம் காரணமாக, சென்னையில் இருந்து கொழும்புக்கும், கொழும்புவில் இருந்து சென்னைக்கும் இன்று இயக்கப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து பயணிகளுக்கு முறையான முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், பல மணி நேரமாக காத்திருந்து கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தோ, மாற்று ஏற்பாடுகள் குறித்தோ விமான நிறுவன தரப்பில் இருந்து இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படாதது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்களது அடுத்தகட்ட பயண திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
உரிய தகவல் கிடைக்காததால், வழக்கம்போல் பயணிக்க வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலைய முனையங்களில் தவித்து வருகின்றனர்.
இதே போல் போர் பதற்றத்தின் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திற்கு அபுதாபி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து வர வேண்டிய 10 வருகை விமானங்களும், அங்கிருந்து புறப்பட வேண்டிய 10 புறப்பாடு விமானங்களும் என மொத்தம் 20 விமானங்கள் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாகின.
Hindusthan Samachar / vidya.b