Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது.
நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
இது தொடர்பாக கடந்த ஜூலை 16-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இரண்டாவது முறையாக அமைச்சரைக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.
இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி அதாவது, 2026-ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடவுள்ளதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் விதி பேரவை 181(1)-, 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று ஆளுநர் நாள் குறித்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தவெக அரசு தாக்கல் செய்யவுள்ள முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் தவெக அளித்துள்ள வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும், படித்து வேலையில்லாதப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவச பயணங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், உயர்கல்விக்கான புதிய திட்டங்கள், வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் போன்ற பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b