Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 21 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுக வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சமூக வலைதளங்களில் கட்சியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து பேசிய சில நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என்று சில நிர்வாகிகள் கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam