தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பை தடுக்க வலியுறுத்தி சிபிஎம் நடைப்பயணம்- 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி, 21 ஜூலை (ஹி.ச.) கர்நாடகாவில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து செல்லும் நீரில் துர்ந
போராட்டம்


கிருஷ்ணகிரி, 21 ஜூலை (ஹி.ச.)

கர்நாடகாவில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது.

ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து செல்லும் நீரில் துர்நாற்றம் வீசுவதுடன், நுரை பொங்கி செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கெலவரப்பள்ளி அணையைச் சுற்றியுள்ள சுமார் 2,000 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகம் வரை 500-க்கும் மேற்பட்டோர் நடைப்பயணம் மேற்கொண்டு, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam