திருநெல்வேலி இரட்டைக் கொலை வழக்கு- 15வது குற்றவாளி காவல் நிலையத்தில் சரண்
திருநெல்வேலி, 21 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 15வது குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய கந்தன் சாமி,
சிறைக்குள் செல்போன்


திருநெல்வேலி, 21 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 15வது குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய கந்தன் சாமி, வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கந்தன் சாமி சரணடைந்ததன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

வழக்கின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam